தமிழை விட தெலுங்கை அதிகம் பேசுகிறார்கள் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உலகில் தமிழை விட தெலுங்கு மொழியைஒன்றரை கோடிமக்கள் அதிகம் பேசுகிறார்கள். தமிழ் தெலுங்கு சமுதாயத்திற்கு எவ்வளவு பிணைப்பு இருக்க வேண்டுமோ அது தற்போது இல்லை. தமிழகம் தெலுங்கானாவிற்கு இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ் தெலுங்கு இடையேயான இணைப்புபாலம் வலுபெறும் என்றுகூறியஅவர்,
தொலைநோக்கு பார்வையோடு மோடியும், அமித்ஷாவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் பதவியை தந்துள்ளதாக எண்ணுகிறேன். தமிழிசைக்கு தற்போது இருக்கும் வரவேற்பு ஆறு மாதத்திற்கு முன் இருந்திருந்தால் அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார் என்றும் கூறினார்.