Minister Ma Subramanian says 1200 senior medical places are going to disappear

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஹிருஷிகேஷ் ராய், சுதான்ஷு துலியா மற்றும் எஸ்.வி.என். பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (29.01.2025) வழக்கில் வழங்கிய தீர்ப்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீடு (Residence based reservation) என்பது கூடாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகும்” எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (30.01.2025) செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் இது தொடர்பாக பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆலோசகருடன் கலந்து ஆலோனை செய்யப்படும். இந்த தீர்ப்பின் நகல் வந்துள்ளது. அதனை வைத்து துறை அலுவலர்களுடன் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்க கூடாது. இந்த தீர்ப்பு முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் இருக்கக்கூடிய மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

Advertisment

அரசு மருத்துவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு முறையில் வழங்கப்படும் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும். சிறுபான்மையினர் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் முழுமையாக பாதிக்கப்படும் இதன் காரணமாக 1200 முதுநிலை மருத்துவ இடங்கள் தமிழகத்தில் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் 69% இடஒதுக்கீட்டு முறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் எந்தெந்த இடத்தில் பாதிக்க கூடாது என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.