மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்)

சென்னையில் கடந்த சில நாட்களாகக்கனமழை பெய்துவருகிறது. திமுக அரசும் சென்னை மாநகராட்சியும் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. பெய்து கொண்டிருக்கும் மழைஅரைமணி நேரம் நின்றாலும் போதும், சாலைகளிலிருந்த தண்ணீர் வழிந்து ஓடியது. இதனால் மக்களின் அவஸ்தைகள் பெருமளவு குறைந்திருந்தது. இதனிடையே சென்னையில் நிறைவு செய்யப்படாதமழைநீர் கால்வாய் பணிகள்முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

Chennai Ma Subramanian rain
இதையும் படியுங்கள்
Subscribe