Advertisment

தி.நகர் தடுப்பூசி முகாமை துவக்கிவைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்! (படங்கள்)

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்திவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தி.நகர் சட்டமன்ற அலுவலகத்தில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் கரோனா மெகா தடுப்பூசி முகாமை துவக்கிவைத்தார். அங்கு பலரும் தங்களது தடுப்பூசி டோஸை செலுத்திவருகின்றனர்.

Chennai Ma Subramanian T nagar
இதையும் படியுங்கள்
Subscribe