Minister Ma Subramanian conducted vist work Trichy Government Hospital

Advertisment

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உத்தமர் சீலி கிராமப் பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவம் குறித்துக் கேட்டறிந்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இன்று ஆய்வு மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று காலை திருச்சி வருகை தந்தார். முன்னதாக உத்தமர் சீலி பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் மக்களிடம் ‘மக்களைத்தேடி மருத்துவம்’ பற்றியும், எந்த அளவில் தாங்கள் அதில் பயனடைந்து வருகிறார்கள் என்கிற விவரங்களையும் கேட்டறிந்தார்.

உண்மையில் மக்களைத்தேடி மருத்துவம் பொது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கிராமத்தில் உள்ள வயதான பலரைச் சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.