தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் விவரங்களைத் தினமும் அறிக்கையாக தமிழ்நாடுஅரசு வெளியிட்டுவருகிறது. இருந்தும்கரோனா தடுப்பூசி தொடர்பாக சந்தேகம் எழுப்பும் பாஜக உள்ளிட்ட கட்சிகள், தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தடுப்பூசிகள் விவரத்தைத் தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன்; இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதித் தருகிறேன்" என்றார்.
தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Advertisment