Advertisment

திருச்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

Minister launches Pongal package in Trichy

Advertisment

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதே போல் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கடந்த 3 நாட்களாக விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe