ஈரோட்டில் பெரியசேமூர் தென்றல் நகரில் 24ந் தேதிமக்களைத்தேடி மருத்துவம் என்றதிட்டத்தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்டகலெக்டர்கிருஷ்ணனுன்னிதலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதித்துறைஅமைச்சர் சு.முத்துசாமி மருத்துவதிட்டத்தைத்தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மருத்துவத்துறையின் சார்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்கரோனாபாதிப்பு இருந்தாலும்பொதுமக்களுக்குக்குறிப்பாக நோயாளிகளாக இருக்கக்கூடியவர்கள் பயன்படுகிற வகையிலே அவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகமக்களைத்தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அனேகமாகஇந்தியத்துணைக்கண்டத்தில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய திட்டம் இது. இதையெல்லாம் இன்றைக்கு அல்ல முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே பத்து வருடகாலமாகத்திட்டமிட்டுக்கொண்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொருஇடத்திலும்அதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து ஒவ்வொரு வாகனத்தையும் இரண்டுபேர் மூன்று பேர் சென்று வீடு வீடாக அவருக்கு யார் யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமோஅதைக்கொடுக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் போய் மருந்து கொடுப்பார்கள் இடையிலே அவர்கள் ஒரு மாதம் சென்ற பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து அவர்கள்தங்களைப்பரிசோதித்துக் கொண்டுமருந்துகளைப்பெற வேண்டும். ஒருவேளை பரிசோதனை அவசியம் இல்லை என்று சொன்னால் நம்முடைய செவிலியர்களை நேரடியாக நோயாளிகள் வீட்டிற்குச் சென்று அந்தமருந்தைக்கொடுத்துவிட்டு வருவார்கள்.
ஒரு நோய்க்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் சிரமத்தின் காரணமாக, சங்கடங்களையும் வேறு விதமான நோய்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அதை எல்லாம் முழுமையாக இப்பொழுது தடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்வாழ்வைக்கொடுக்கிற திட்டமாக அமைகிறது. ஈரோடு மாநகரில் மட்டும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 530 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5277 பேர் பல்வேறுஇணைநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்எனப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 182 பேர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1521 பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள். மக்கள் தேடி மருத்துவத் திட்டம் மூலம் இந்த நபர்கள்முழுமையாகப்பயனடைவார்கள்” என்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ்எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராஉட்படப்பலர் கலந்து கொண்டனர்.