தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும், மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். கே.பி.அன்பழகன் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.