தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். திருச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் 40 ஆயிரம் பேருக்கு உடனடி தீர்வு காணும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
திருச்சியில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும், புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கவும் உள்ளதையொட்டி, சத்திரம் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகரான், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.