
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் முழு மூச்சோடு செயல்பட்டு கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (01.06.2021) தொடங்கிவைத்தார். மேலும் தடுப்பு ஊசியின்தேவையை வலியுறுத்தும் பிரச்சாரவாகனத்தை தொடங்கிவைத்தார்.
இந்த மையத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்குதல், சாலையோரவாசிகள் மற்றும் தேவையுடையவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் மூலம் உதவி செய்தல், கரோனாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினரைப் பயன்படுத்துதல், கரோனாவால்பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம்அவசரத் தேவைக்கான மருத்துவ எண்களைக் கொடுத்து உதவுதல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரக் கூடியகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான பணிகள் என ஜமால் முஹம்மது உதவி மையத்தின் மூலம் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி உதவி மையத்தினைத் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, 100 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார். மேலும், இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால்உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)