Published on 06/06/2021 | Edited on 06/06/2021

முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ள பகுதி, கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக நிழல் மற்றும் ஆக்சிஜன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
இதில் வேம்பு, புங்கன், மகிழம், அரசு, ஆல், நாவல், ஏழிலை, பாலை உள்ளிட்ட 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு . இந்த விழாவில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.