அரசு கட்டடங்களை திறந்துவைத்த அமைச்சர் கே.என்.நேரு

Minister KN Nehru inaugurated the government buildings

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இன்று திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம்,ஏவூர்தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக்கட்டடத்தினைதிறந்து வைத்து 22பயனாளிகளுக்குரூ.18 இலட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து,திருத்தியமலையில்ரூ.19.72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டடத்தினைதிறந்து வைத்தார். அதேபோல்,காமாட்சிபட்டியில்ரூ.22.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டடத்தினைதிறந்து வைத்தார். அடுத்ததாக வேங்கை மண்டலத்தில் புதிய நியாய விலைக் கடையினை திறந்து வைத்தார். முசிறி ஒன்றியம்,புலி வலத்தில்ரூ.19.72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டடத்தினைதிறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியினரும் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe