Advertisment

மக்களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் கே.என். நேரு! 

Minister K.N. Nehru given patta to people

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற விழாவில், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 671 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று வழங்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இன்று மொத்தம் 3 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் லால்குடியில் மட்டும் மொத்தம் 1 கோடி 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறினார். அருகில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe