Advertisment

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு; முதல்வர் இரங்கல்

Minister K.K.S.S.R. Ramachandra's mother passed away; Condolences to the Chief Minister

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisment

அதேநேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

mother
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe