Minister KKSSR ramachandran mother passed away

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனின் தாயார் ஆர். அமராவதி அம்மாள்முதுமைகாரணமாகஇன்று டிசம்பர் 22 ஆம் தேதி தனது 94வது வயதில் இயற்கை எய்தினார். அவருடைய உடல்விருதுநகரிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ‘அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Minister KKSSR ramachandran mother passed away

அமராவதி அம்மாளின் உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், சிவசங்கர், மூர்த்தி, தமிழ்நாடுசபாநாயகர் அப்பாவு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம். குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், தளபதி உள்ளிட்டோர் மற்றும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.அமராவதி அம்மாளின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் இன்று (22-ஆம் தேதி) மாலை விருதுநகர், புல்லலக்கோட்டை சாலை மயானத்தில் நடைபெறவுள்ளது.