ராஜபாளையம் அருகே, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் அய்யனார், கரோனா தொற்றினால் உயிரிழந்தார்,
இதனை அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைக் காவலர் அய்யனாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அய்யனாரின் தாய் கதறி அழ, கண்கலங்கிய அமைச்சர். “காவல்துறை பணி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அத்தகைய ஒரு உன்னதப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில்தான், கரோனா தொற்றுக்கு ஆளாகி, இன்னுயிரை விட்டிருக்கிறார், அய்யனார். நம்மைவிட்டு அவர் பிரிந்தது, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புதான்..” என்று கூறியதோடு, அந்தக் குடும்பத்திற்கு, தனது சொந்த நிதியிலிருந்து, ரூ.3 லட்சம் வழங்கவும் செய்தார்.