Advertisment

அமைச்சர் காமராஜுக்கு 'எக்மோ' பொருத்தப்படவில்லை! - மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

minister kamaraj health condition private hospital says the bulletin

Advertisment

அமைச்சர் காமராஜுக்கு எக்மோ கருவி பொருத்தப்படவில்லை என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் அமைச்சரின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் இன்று (21/01/2021) மதியம் வெளியிட்ட அறிக்கையில், "அமைச்சர் காமராஜின்உடல்நிலை சீராக உள்ளது; அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்படவில்லை. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சருக்கு நன்றாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் இருந்ததை விட அமைச்சர் காமராஜ் உடல்நிலை நன்றாக உள்ளது. அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்து அரசுக்கு தினம் தினம் தகவல் அளிக்கிறோம். எக்மோ சிகிச்சை அளிக்கும் கருவி உள்ளதால் மட்டுமே அமைச்சர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRIVATE HOSPITAL Chennai coronavirus minister kamaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe