Published on 06/01/2021 | Edited on 06/01/2021

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் உள்ளிட்டவையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்குக் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அமைச்சர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.