/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadambur raju_2.jpg)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; "அ.தி.மு.க. சுயமாக இயங்கக் கூடியது, எங்களை இயக்குவதற்கு யாராலும் முடியாது. சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது தி.மு.க. ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது தி.மு.க. அரசியல் அனுபவம் உள்ள துரைமுருகன் போன்றோர் இதை மனவேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க. கூட்டணியில் ஒரு கட்சிக் கூட இருக்காது. மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்"என்றார்.
Follow Us