விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியான நபார்டின் 38ஆவது ஆண்டு தொடக்க விழா,சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்த நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பதால் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருப்பதாகக் கூறினார்.