Advertisment

நேற்று ஒரு பேச்சு... இன்று ஒரு பேச்சு... நாளை ஒரு பேச்சு... - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 Minister Jayakumar's criticism!

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தே.மு.தி.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,அதேசமயம் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனைநடத்தியதாகவும்தகவல்கள் வெளியான நிலையில், இறுதியில்ஒருவழியாக அமமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது தேமுதிக.

Advertisment

அ.ம.மு.கவுடனானதொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட உள்ளது. கடந்த 14.03.2021 அன்று இரவு தே.மு.தி.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பேசுகையில், 'ஜெயலலிதாவிடம் இருந்தபக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை' எனப் பேசியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.

Advertisment

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மாறி மாறி பேசுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்விமர்சித்துள்ளார். சென்னையில்செய்தியாளர்களைச்சந்தித்த அவர், பிரேமலதா விஜயகாந்தின்கருத்து குறித்த கேள்விக்கு, “அவர் பேசுவதுநேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு.கூட்டணிக்கு முன் ஒரு பேச்சு, கூட்டணிக்குப் பின் ஒரு பேச்சு”என்று விமர்சித்தார்.

tn assembly election 2021 admk dmdk premalatha vijayakanth jayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe