Skip to main content

அஜித்தின் ஏர் டாக்ஸியில் அமைச்சர் ஜெயக்குமார்!! வைரலாகும் வீடியோ!!

Published on 25/01/2019 | Edited on 26/01/2019

அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அஜித் குழுவினரால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஏர்டாக்ஸி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தக்க்ஷா என்ற தொழில்நுட்ப குழுவின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அந்த குழுவினருடன் சேர்ந்து ஏற்கனவே சிறிய ரக விமானங்கள் போன்றவை உருவாக்கி வந்த நிலையில் அஜித்தின் தக்க்ஷா குழுவினரால் வடிவமைக்கப்பட்ட 60 முதல் 80 கிலோ வரை எடையுள்ள பொருட்களை தாங்கும் திறன் உள்ள  ஏர்டாக்ஸி நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

 

minister jayakumar travel air taxi made by ajith team

 

 

அந்த டாக்ஸியில் அமைச்சர் ஜெயக்குமார் பயணிப்பது போன்ற படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஏர்டாக்ஸி இரண்டு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப் போலவே நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுத்துவிட்டால் அந்த திசைக்கு அழைத்துச் செல்லும் இந்த டாக்ஸியில் 45 நிமிடங்கள் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும் அக்குழு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்தது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Jayakumar has told what happened while filing nomination in North Chennai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அதிமுகவினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் 5 பேர் மட்டுமே அனுமதி., ஆனால் திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு, வேட்பாளர், மேயர் பிரியா உள்ளிட்ட 20 பேரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். நான் முதலில் இங்கே வந்தேன் அப்போது, வேட்புமனு டோக்கன் கேட்டேன். ஆனால் அலுவலர் வேட்பாளரிடம் தான் டோக்கன் வழங்குவோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்று வந்துவிட்டேன். ஆனால், எங்கள் வேட்பாளர் மனோ வந்தவுடன் 7 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு பிறகுதான் திமுக வேட்பாளர்கள் வந்தார்கள் அவர்களுக்கு 8 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

திமுகவினர், வேட்பாளர்கள் வருவதற்கு முன்பே டம்பி வேட்பாளர் மூலம் 2 ஆம் நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதனால் நாங்கள் தான் முறையாக வந்தோம்; நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றோம். ஆனால் திமுகவினர் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றனர். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் நடந்ததை கூறினார். பின்பு தலைமை தேர்தல் அதிகாரி, முதலில் அதிமுக தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளே இருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார்” என்றார்.

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.