நீயும் பொம்மை, நானும் பொம்மை.. நினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை என பொம்மைகள் தின வாழ்த்துகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை நந்தனத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

உலகின் முதல் உயிரினம் கடலில் தான் தோன்றியது; உயிரினங்கள் தோன்றிய கடலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். கடல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலின் அவசியம், அதை பாதுகாப்பது குறித்த கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளது.

(ஜூன் 8ஆம் தேதி) உலக கடல் தினம் என்றால் (ஜூன் 9ஆம் தேதி) உலக பொம்மைகள் தினம்.. உலகமே ஒரு நாடக மேடை. அதில் நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை.

பிரபஞ்சம் என்பது ஒரு சுண்டைக்காய் போன்றது. அந்த சுண்டைகாயில் நாம் அனைவரும் ஒட்டு மொத்தமாக பொம்மைகளாகத்தான் இருக்கிறோம். இன்று பொம்மைகள் தினம்-வெறும் பொம்மைகளாக இருக்காமல் சமூகத்திற்கான படைப்பாளியாக இருக்க வேண்டும்.

Advertisment

நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.