Minister Jayakumar suddenly prayed during a press conference

Advertisment

செய்தியாளர்கள்சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென தொழுகையில் ஈடுபட்டார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திடீரென தூரத்திலிருந்து தொழுகை சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்ட அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு தொழுகை செய்தார். பின்,தொழுகை முடிந்தபிறகுசெய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்தபேச்சுகள் தமிழகத்தில் எழுந்திருக்கும் நிலையில், வேளாண்மசோதா விவகாரத்தில் தான் நினைத்தது வேறு.ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்பாலசுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான பதிலை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

Advertisment

கட்சி எடுப்பதுதான்நிலைப்பாடு எனமுதல்வர்தெளிவாகச் சொல்லிவிட்டார். அதிகபட்சமாகக் கட்சியினுடைய கருத்து தான் முக்கியம். முதலமைச்சர் அறிக்கை கொடுத்ததால், அதைத்தான் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.