Minister jayakumar, press meet at chennai chepauk

சென்னை சேப்பாக்கத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், அந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது தமிழர்கள் அனைவருமே தலைகுணியும் அளவுக்கான ஊழல். ஆ.ராசாவால் தமிழர்களுக்கு தலைகுணிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவமானச்சின்னமாக ஆ.ராசாவும் தி.மு.க.வும் இருந்தநிலை ஏற்பட்டது” என்றார்.

Advertisment

மேலும், சாலை மேம்பாட்டு நிதியில் தி.மு.க ஊழல் செய்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், “இமயமலையை முழுங்கிய மகாதேவன் தி.மு.க. இப்பட்டிப்பட்ட மகாதேவன்களைப் பார்க்கவே முடியாது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துவிட்டு, ஊழலில் திளைத்து, ஊழலின் ஒட்டுமொத்த சொந்தக்காரர்களாக இருந்த திமு.க. இன்று எங்களைப் பார்த்து புகார் சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவதாகத்தான் நிச்சயமாக மக்கள் எடுத்துகொள்வார்கள்” என்று தெரிவித்தார்.