முதுகெலும்பில்லாமல் உரிமையை தாரை வர்த்தவர்கள் எங்களை பார்த்து முதுகெலும்பில்லை என கூறுகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisment

minister jayakumar interview

இன்று செய்தியாளர்களை சந்தித்த மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்க காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதிதான். மனிதனுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்தியாவிற்கு காஷ்மீர் முக்கியம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளது என்றார்.

மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எங்கு நடந்தாலும் அரசுக்கு தகவல் கொடுத்தால்கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.