சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என கூறினார்.

Advertisment

minister jayakumar interview

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம்" என கூறினார்.