Advertisment

பாஜக அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார்!

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரச்சார களத்தை தொட தயாராகி வருகிறது அந்த இரண்டு தொகுதிகளும்.

Advertisment

Minister Jayakumar in BJP office

இந்நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரிவருகிறது. சில நாட்களுக்கு முன் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவுகோராத நிலையில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பானபலசெய்திகள் வெளிவந்த நிலையில், பாஜக உடனான கூட்டணி தொடர்வதாக துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸும், அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக பாஜக முக்கிய நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசனும் தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாஜக அலுவலகம் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார்.

இந்த சந்திப்பில் மோடி சீன அதிபர் சந்திப்பு ஏற்பாடு குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதகாவும் கூறப்படுகிறது.

Pon Radhakrishnan Vikkiravandi nanguneri byelection jayakumar admk minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe