ேிு

Advertisment

கரோனா வைரஸ் தொற்று மனிதர்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்ற மார்ச் மாதம் முதல் பல கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துபருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் மூலம் அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக நினைத்துக்கொண்டு முதல்வருக்கு பேனர் வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அண்ணா பல்கலை வேந்தர் ஏஐசிடியின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர் அன்பழகன் இதுதொடர்பாக மாற்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அரசு பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். அரியர் மாணவர்களின் தேர்ச்சி ரத்தாகுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.