Advertisment

ஸ்ரீ ரங்கம் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்!

Minister inaugurates first aid center at Sri Rangam Temple

உலக புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைப் புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக இங்கு முதலுதவி மருத்துவச் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

Advertisment

பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று, கோயிலில் அவசர தேவைக்கான முதலுதவி மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முதலுதவி மையத்தினை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் செல்வராஜ், மண்டல குழுத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

minister trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe