ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 4444 மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்!

10:23 PM Nov 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சிப் பொறுப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடியாகவே வாழ்த்துச் சொல்லி சால்வை புத்தகங்கள் வழங்கினார்கள்.

அதுபோல் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் நேரடியாக உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம், கள்ளி மந்தையம் ஊராட்சியில் இருக்கும் பொருளூர் சாலையில் இருக்கும் வேலாயுதம்பாளையம் பிரிவில் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு 4,444 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு 4,444 மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பொன் ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT