Advertisment

“எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத்தான்” - அமைச்சரிடம் வாக்குறுதி கொடுத்த மக்கள்

Minister I. Periyasamy who collected votes from the people

Advertisment

திண்டுக்கல் பாராளுமன்றத்தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் சி.பி.எம். கட்சி வேட்பாளராக சச்சிதானம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திண்டுக்கல் மாநகரில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் திறந்த ஜீப்பில் வேட்பாளர் சச்சிதானந்ததுடன் வாக்குசேகரித்தார்.

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நின்று கொண்டு, தொழுகை முடிந்து வரும் இஸ்லாமிய பெருமக்களிடம் கூட்டணி கட்சி வேட்பாளரான தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு, பிட் நோட்டீஸ் கொடுத்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமிய மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கரங்களைப் பிடித்து எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்குத்தான்என்று கூறி உறுதியும் அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்குல் ஹக், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், இலக்கிய அணி அமைப்பாளர் இல.கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe