Skip to main content

ஆத்தூர் தொகுதி முழுவதும் அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி ஆய்வு!

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

Minister I. Periyasamy thorough inspection  entire Athoor constituency

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி  திமுக உறுப்பினரும், ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர்  சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னிமாந்துரை,  கொட்டப்பட்டி கிராமத்தில் இருந்து தனது ஆய்வை தொடங்கி புதுப்பட்டி, மாங்கரை, குட்டத்துப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை,  மெட்டுர்பலக்கனூத்து சாலை, சித்தரேவு சாலை, ஆத்தூர் ஊராட்சி சாலை மற்றும்  சின்னாளபட்டி பேரூராட்சி வழியாக வரும் சித்தரேவு சாலை, காந்திகிராமம்  சாலை மற்றும் அம்பாத்துரை- செம்பட்டி சாலை ஆகிய சாலைகளை ஆய்வு  செய்தார்.  

அதன்பின்னர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தலைமைப் பொறியாளரும், சிறப்பு அலுவலருமான சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர்  ரமேஷ், கோட்டப் பொறியாளர் சங்கர், குமரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள்  கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், கோட்டப் பொறியார் மகேஷ்வரன், உதவி  கோட்டப் பொறியாளர்கள் கண்ணன், முனீஸ்வரன் உட்பட நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆத்தூர் தொகுதியில் சேதம் அடைந்த  சாலைகளை புதுப்பிப்பதோடு தேவைப்படும் இடங்களில் வடிகால் வசதியும்  செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை  அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லும் வகையில் சாலைகளை அமைத்துக்  கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Minister I. Periyasamy thorough inspection  entire Athoor constituency

அதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி  நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த  அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிவுக்காலம் முடிந்துவிட்டது. கட்சி நிர்வாகிகளும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும்  இணைந்து ஊராட்சிகளுக்கு தேவைப்படும் நலத்திட்டங்களை தேர்வு செய்து தனது கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றை விரைவாக செயல்படுத்த  வேண்டும் என கூறினார். தமிழகத்திலேயே சிறப்பாக ஆத்தூர் தொகுதியில்  சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம்  கட்டப்படும் வீடுகளை கண்காணித்து உடனடியாக வீடுகளை கட்டி முடிக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதோடு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வீடுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும்  உதவிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆலோசனையின் போது தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாறைப்பட்டி ராமன்,  பிள்ளையார்பட்டி முருகேசன், அமைச்சரின் உதவியாளர் ஹரிஹரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி, ஒன்றிய பொறியாளர்கள்  ராமநாதன், மைக்கேல்ஜான் பிரிட்டோ, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத்  தலைவர் பாஸ்கரன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்