Minister I. Periyasamy says Muthamil Murugan Conference has been a huge success

Advertisment

பழனியில் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதீனங்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல்வேறு பேச்சாளரும் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்காக நடக்கக்கூடியது உலக முத்தமிழ் முருகன் மாநாடு. முருகன் தமிழ் கடவுள் என்பதால் முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் மிகச்சிறப்பான உலக அளவில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அனைவரும் வந்துள்ளனர். அது போல் முருகர் பக்தர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக இந்த மாநாட்டுக்கு வந்தும் இருக்கிறார்கள்” என்று கூறினார்