
திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சரும் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அப்போது ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த போது, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி தகுதியுள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் என்றார். ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த 4 வருடங்களாக தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் அனைத்தும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆட்சி செய்த அதிமுக ஆட்சி போல் இல்லாமல் இல்லம் தேடி வேலைவாய்ப்பு வழங்கும் ஆட்சியாக கலைஞர் வழியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி உள்ளது.

குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை, உட்பட எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே போற்றும் அளவிற்கு தமிழகத்தில் நல்லாட்சி செய்து வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கடன் வலுக்கட்டாயமாக வசூல் தடுப்பு மசோதா-2025 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். வரும் 2026ம் தேர்தல் திமுகவிற்கு முக்கியமான தேர்தல் என்பதால் கட்சி நிர்வாகிகள் இன்றிலிருந்து தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும். குறிப்பாக கழக மூத்த நிர்வாகிகளோடு இளைஞரணியினர் இணைந்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.