Skip to main content

பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

Minister I. Periyasamy met the public and addressed their grievances

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 2, 8, 9, 10 ஆகிய வார்டு பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

அதனடிப்படையில், நேற்று முதன் முதலில் 10வது வார்டு வி.எம்.எஸ்.காலனி மற்றும் அண்ணா நகர் பகுதிக்குச் சென்றபோது கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட தார் சாலைகளைப் புதுப்பித்துத் தரவேண்டும் என்றும், வி.எம்.எஸ். காலனி பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பின்னர் வடிகால் செல்லும் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து அந்த இடத்தை சர்வே செய்ய உத்தரவிட்டார். 

 

அதன்பின்னர் 9வது வார்டு பகுதிக்கு நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த 10 இளைஞர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். பின்னர் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அதன்பின்னர் 8வது வார்டு சௌராஷ்ரா காலனிக்குச் சென்றபோது சௌராஷ்ரா சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Minister I. Periyasamy met the public and addressed their grievances

 

அதன்பின்னர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தார் சாலை வசதி, மின் கம்பத்தை மாற்றிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கள் வீட்டிற்கு பட்டா வசதி செய்து கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதைக் கேட்ட அமைச்சர் பெரியசாமி, உடனே மாவட்ட சப் கலெக்டரை தொடர்புகொண்டு, பட்டா கொடுக்க உத்தரவிட்டார். அதேபோல், மின்வாரிய துணை பொறியாளரைத் தொடர்பு கொண்டு அப்பகுதியில் பழுதடைந்து இருந்த மின் கம்பத்தை மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார். 

 

2வது வார்டு பகுதிக்குச் சென்றபோது தங்களுக்கு புதிய கழிப்பறை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் குளியலறையுடன் கூடிய கழிப்பறை வசதி செய்து கொடுப்பேன் என உறுதியளித்ததோடு அதற்கான பணிகளையும் ஒரே நாளில் தொடங்க உத்தரவிட்டார்.

 

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “1989ம் ஆண்டு முதல் இன்று வரை எவ்வளவோ பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்கள் சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது அவர்கள் எனக்கு வாக்குகளை வாரி வழங்கியதால், வரலாறு காணாத வெற்றியைப் பெற முடிந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 10 வருடங்களாகச் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்து சின்னாளபட்டியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன். தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு இன்னும் கூடுதலான நலத்திட்டங்களை சின்னாளபட்டி மக்களுக்குச் செயல்படுத்துவேன்” என்றார்.

 

இதில் ஒன்றிய செயலாளர் முருகேசன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி உள்பட கவுன்சிலர்களும் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர்.