ADVERTISEMENT

பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை; களத்தில் இறங்கிய உ.பி.கள்!!

07:38 AM Apr 14, 2024 | ArunPrakash

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி கட்சி சார்பில் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள்.

ADVERTISEMENT

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரியகுளம், கம்பம்‌, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றியுள்ளது. போடி, உசிலம்பட்டி தொகுதிகளை எதிர்க்கட்சியான அதிமுக வசம் உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இத்தொகுதி ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக தான் இருந்து வருகிறது. அது போல் கடந்த தேர்தலில் அதிகாரம் பண பலம் இருந்தும் கூட ஓபிஎஸ் மகன் ஓபிஆர் 5,04,813 ஓட்டு தான் வாங்கினார். ஆனால் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிகாரம் பண பலம் இல்லாமல் 4,28,120 லட்சம் ஓட்டு வாங்கி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் (76693) தோல்வியை தழுவினார்.

ADVERTISEMENT

ஆனால் தற்பொழுது அதிமுக உடைந்திருப்பதால் அந்த ஓட்டுகளும் சிதற வாய்ப்பு உள்ளது. அது போல் டிடிவிக்கும் இலை ஓட்டுகள் விழுக வாய்ப்பு உள்ளது. அதனால் கடந்த முறை வாங்கிய ஓட்டுகள் வாங்கினாலே தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று விடுவார். அதனால்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தேனி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இத் தொகுதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது போல் தமிழக அளவில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பேசி விட்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும் தொகுதியில் களமிறங்கி வாக்காள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அது போல் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் தொடர்ந்து தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி முழுக்க ஆய்வு செய்து பொறுப்பில் உள்ள உ.பி.க்களையும் களத்தில் இறக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு திடீரென நேற்று முன் தினம் காலை விசிட் அடித்த அமைச்சர் ஐ.பி. பெரியகுளம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முக்கையா, உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த தேர்தலுடன் கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .

அதைத் தொடர்ந்து தேனியில் நகர பொறுப்பில் உள்ள உ.பி.க்களிடமும் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து போடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் தொகுதி பொறுப்பாளரான மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கட்சி ஆபீஸ்சில் ஆலோசனை செய்து இத்தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தர்மத்துப்பட்டி, நரசிங்கபுரம்பாளையத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பி. ஆலோசனை செய்தார் அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக கம்பம் ராமகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியை சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருமான ஸ்டாலின் சொன்னது போல் இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நீங்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்ய வேண்டும். அப்படி வேலை பார்த்தால் தான் இத்தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியும். பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் தலைவர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைத் தொகையை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அதன் மூலம் மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். அதனால் உடனடியாக தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து உ.பி.களும் தேர்தல் காலத்தில் அதிரடியாக இறங்கி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT