Minister I. Periyasamy brother elected as the chairman of the board of trustees

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோவிலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடந்த அறங்காவல் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடன் பிறந்த சகோதரர் அன்புமருதை போட்டியின்றி ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைவர் அன்பு மருதை மற்றும் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, சுப்பையா, வாசவி, பூங்கொடி ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் வத்தலக்குண்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், திமுக பேரூர் செயலாளர் சின்னதுரை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.