Minister Geetha Jeevan presents gold rings to 26 children kalaignar birthday

முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் பெ. கீதா ஜீவன் வழங்கினார்.

Minister Geetha Jeevan presents gold rings to 26 children kalaignar birthday

Advertisment

முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பெ. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் பிறந்த 26 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து தாய்மார்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம், பழங்கள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Minister Geetha Jeevan presents gold rings to 26 children kalaignar birthday

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர்கள் ரவீந்திரன், ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி