Skip to main content

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெளியான தரவரிசை பட்டியல்; பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Publishth Rank List; Date Notification of Engineering Consulate

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ளார். சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org  என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சில் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 22ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாணவர்களின் ஆபத்தான பயணம்; கிராம மக்கள் வைக்கும் கோரிக்கை!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Students traveling dangerously in a bus near Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி  மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் படிக்கட்டில் தொங்கிச் சென்று பயணம் செல்லும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. படியில் தொங்கிக்கொண்டு செல்வதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.