Advertisment

“முதல்வர் ஸ்டாலின் கலைஞரை மிஞ்சி விடுவாரோ என்ற பயம் எனக்கு உள்ளது” - அமைச்சர் துரைமுருகன்

Minister Duraimurugan said I am afraid that mk stalin will surpass kalaignar

Advertisment

மத்திய பாஜக அரசைக் கண்டித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்தியாவிலேயே சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முதலில் ஏற்றிய தேசியக் கொடி குடியாத்தத்தில் தான் தயாரிக்கப்பட்டது. திராவிட கொள்கை கொண்ட அண்ணல் தங்கோ வாழ்ந்த ஊர். என்னை திமுகவாக ஆக்கியது இந்த குடியாத்தம் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். 1958 ல் இந்தியைத் திணித்தார்கள் எதிர்த்தோம், வாபஸ் வாங்கினார்கள்.

அந்த நேரத்தில் பெரியார், அண்ணா இருந்தார்கள். 1965 - மீண்டும் கொண்டு வந்தார்கள் அப்போதும் நமது வேகத்தைப் பார்த்து வாபஸ் வாங்கி விட்டார்கள். அப்போது கலைஞர் இருந்தார். இப்போது, ‘அவருடைய மகன் சின்னப் பையன் இருக்கிறான், திணித்துப் பார்ப்போம் என்ன செய்வான்? என நினைத்து திணிக்க பார்க்கிறார்கள். இந்தியாவிலேயே மத்திய அமைச்சரை பார்த்து நாவடக்கத்துடன் பேசுங்கள் எனக் கூறிய ஒரே ஆண்மகன் நம்ம முதல்வர் தான்.

Advertisment

Minister Duraimurugan said I am afraid that mk stalin will surpass kalaignar

மத்திய அரசு சொன்னது போல் முதலில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என இருந்தோம். பின்னர் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்றார்கள். இப்போது ‘நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர்’ என வந்துவிட்டது. இதனை பின்பற்றி தான் நானும் அருகே உள்ள எம்.எல்.ஏ.வும் ஒரே பிள்ளையை பெற்றுக் கொண்டோம். ஆனால் வட இந்தியாவில் அதைக் கட்டுப்படுத்தவில்லை. வட இந்தியர்களுக்கு வேறு வேலையே இல்லை, பிள்ளையை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நீங்க சொன்னதாலே தான் நாங்கள் பின்பற்றினோம்” என பேசியவாறு, அருகில் இருந்த எம்.எல்.ஏ நந்தகுமாரை பார்த்து ‘ச்சே சான்ஸை விட்டோமே’ என்று சிலாகித்துப் பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அகநானூறு, புறநானூறு எட்டுத்தொகை பத்துப்பாட்டு என 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியவன் தமிழன். ஒருத்தனுக்கு ஒருத்தி தாண்டா தமிழ்நாட்டில் நாகரிகம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்டு, இலங்கையில் வென்றவன், எங்களை பார்த்தாடா காட்டுமிராண்டிகள் என்கிறீர்கள், எங்களை பார்த்து நாகரீகமற்றவர்கள் என ஒரு வட நாட்டு மந்திரி பேசுவதா? சரி அதையெல்லாம் விடுங்க, தமிழன் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிக்கிறார்கள் நீங்கள் ஒரு முறையாவது குளிக்கிறீர்களா?

ஒருவன் நாற்றம் பிடித்த ஒரு மாட்டை ஒரு இடத்தில் கட்டி வைத்துவிட்டு அதைத் தொடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என பந்தையம் வைத்தான்.மாட்டின் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மூன்று தமிழர்கள் உன் பணமே வேண்டாம் ஆளவிடுடா சாமி என வந்துவிட்டார்கள். ஒரு வட நாட்டுக்காரன் நான்காவதாக போனான். ஆனால் அந்த மாடு ஓடிவிட்டது இவனுடைய நாற்றத்தை தாங்கிக் கொள்ளாமல். அந்த மாதிரி நாற்றம் பிடித்தவர்கள் நீங்கள் எங்களால் பார்த்தடா நாகரிகம் மற்றவர்கள் என்று பேசுகிறீர்கள்?

நான் சொன்ன கோபித்துக் கொள்ள கூடாது, நாங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவர்கள். ஆனால் அவர்கள் ஒருத்தியை 5 பேர் கல்யாணம் செய்து கொள்வார்கள், ஒருவர் வெளியே வரும் வரை இன்னொருவன் காத்திருப்பான் ச்சீ இதுவாடா உங்கள் நாகரீகம். எங்களைப் பார்த்த நாகரீகம் அற்றவர்கள் என பேசுகிறீர்கள் நாக்கை எடுத்து விடுவான் டா தமிழன்.அண்ணா உரசி பார்த்து செல்வார், கலைஞர்எச்சரிக்கையாக செல்வார். ஆனால் முதல்வர் ஸ்டாலினின் பழக்கம் நாக்கை அறுத்து விடுவோம்? என்பது. அப்போது ராஜாஜி இந்தியை கொண்டு வந்தார், இன்னொரு பக்கம் குலக்கல்வியை கொண்டு வந்தார்கள்.

இந்தி திணிப்பு, குலக்கல்வி, நாடாளுமன்ற அவை உள்ளிட்ட மும்முனை பிரச்சனையை முன்வைத்து போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அப்போது அண்ணாவும், பெரியாரும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் இணைந்து போராடினார்கள். அதற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலினின் காலத்தில் தான் நிதி கொடுக்காததற்கும் தொகுதி மறு சீரமைப்பு, இந்தி திணிப்பு என மும்முனை போராட்டத்தை தளபதி ஆரம்பித்துள்ளார். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதல்முறையாக அண்டை மாநிலங்களுக்கு தூதுவர்களை அனுப்புகிறார். மற்ற நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புவது போன்ற தைரியம் நமது முதல்வருக்கு மட்டும் தான் உள்ளது. அதனால் தான் நம் மீது கையை வைக்க பயப்படுகிறார்கள்.

ஆனால் எங்க ஆட்சியை கலைத்து விடலாம் என நினைக்காதீர்கள்; அது முடியவே முடியாது. அதற்கு சட்டம் வந்துவிட்டது இல்லை என்றால் இந்நேரம் கலைத்து இருப்பார்கள். நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் குளவி கூண்டில் கை வைத்ததுபோலே ஆக்கிவிடாதீர்கள். அண்ணாவின் அடக்கமும், கலைஞரின் துணிவும் சேர்த்து ஸ்டாலினுக்கு ஒரு தைரியம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தால் என் தலைவன் கலைஞரை இவர் மிஞ்சி விடுவாரா என்ற பயம் எனக்கு உள்ளது” என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe