Minister Duraimurugan comments on the Governor rn ravi

வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

Advertisment

கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், “ஊழல் வழக்கில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்தித்தது குறித்து கேட்டதற்கு, எதிலும் ஏடாகூடமான காரியத்தை செய்பவர் நமது ஆளுநர். கொஞ்சம் பரபரப்போடு செயல்படுவர் அவர். அதிலே ஒன்றுதான் இதுவும்” என்று பதிலளித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நீட் எதிர்ப்பு தேசத்திற்கான எதிர்ப்பு என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறாரே எனக் கேட்டதற்கு, “அய்யய்யோ அவங்க ரொம்ப பெரியவங்க, பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது” என்றார். இதையடுத்து, பொன்முடிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது குறித்து கேட்டதற்கு, “அது வரவேற்கத்தக்கது. வெள்ளம் காரணமாக 760க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்வதற்கான மதிப்பீடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். சேதமடைந்த கால்வாய்கள் மற்றும் மதகுகள் உள்ளிட்டவற்றை சரி செய்ய சுமார் 2000 கோடிக்கு மேல் ஆகும் என எங்கள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றார்.