minister duraimurugan arrives delhi today

Advertisment

கர்நாடக அரசின் மேகதாது அணை, காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்றிரவு டெல்லி செல்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை (05/07/2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது, காவிரி பங்கீடு, மேகதாது அணை விவகாரம், கேரளா, ஆந்திரா மாநிலங்களுடனான நதிநீர் விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.