Minister Duraimurugan admitted to hospital

அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் (நீர்வளத்துறை அமைச்சர்) பதவி வகித்து வருபவர் துரைமுருகன் (வயது 86). இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது காய்ச்சல் காரணமாகச் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.