/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraimurugan-art-dipr_1.jpg)
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன் (வயது 86). இந்நிலையில் இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு சளிதொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கு அங்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தனர். மேலும் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)