Minister DuraIkkannu's health is worrying!

Advertisment

கடந்த 13- ஆம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கடந்த 14- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.அவரது முக்கிய உறுப்புக்களை சீராக இயங்க வைக்கும் பணி சவாலாக உள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சைக்கு அவரதுஉடல் எவ்வாறு ஒத்துழைக்கிறதுஎன்பதை 24 மணி நேரத்திற்கு பிறகுதான்கணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.