/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister duraikannu (1).jpg)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் தயார் மறைவையொட்டி, முதல்வருக்கு ஆறுதல் சொல்ல சேலத்துக்கு செல்லும் வழியில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு உடல்நலம் குன்றியது. இதையடுத்து, அமைச்சர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் துரைக்கண்ணு சென்னை அழைத்துச்செல்லப்பட உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)