Minister Durai Murugan suddenly fell ill

Advertisment

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார். மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிலையில் முதல்வருடன் வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.