/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_132.jpg)
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகள் இயக்கப்படும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுப் பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனைப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது. அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா அல்லது கல்லா எனத் தெரியவில்லை” என்றார்.
இதையடுத்து மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் பேசியது குறித்துக் கேட்டதற்கு, “நானும் கொஞ்சம் விவரம் தெரிந்தவர் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்குக் கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது” எனப் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)